ஆட்டோ ஓட்டுநரின் மகள் இந்தியாவின் பேரழகியானார்!

ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஒருவர் இந்தியாவின் இரண்டாவது பேரழகியாக தெரிவான நிலையில், வறுமையிலும் சாதித்த அப்பேரழகிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஎல்சிசி ஃபெமினா நடத்தும் மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டி மும்பையில் இடம்பெற்றது. இதில் முன்னணி அழகிகளாக 15 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

அவர்களில் முதலிடத்தை பிடித்த தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி மிஸ் இந்தியாவாக தெரிவானார்.

இதன்மூலம் அவர் டிசம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் 2021 ஆண்டிற்கான உலக அழகிப்போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

அவரை தொடர்ந்து இரண்டாவது இடங்களை பிடித்து ரன்னர்அப் ஆக உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மான்யா சிங் மற்றும் ஹரியார்னாவை சேர்ந்த மனிகாசிஷோகந்த் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.