50 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆட்டிகல அறிவிப்பு!


9 மில்லியன் அஸ்ட்ரா செனகா தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அதற்காக நிதியமைச்சு 50 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையேயும் இராஜதந்திர மட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தடுப்பூசிகளை இலங்கைக்கு கொள்வனவு செய்வதற்கு முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே வேளை,நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 87 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 29ஆம் திகதி முதல் இந்தியாவின் தடுப்பூசிகளை மக்களுக்கு உபயோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.