இலங்கையில் மீண்டுமொரு சிறியளவிலான நில அதிர்வு!

பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (12) காலை 4.53 மணியளவில் சிறியளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

லுணுகல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மடுல்சீம, அகிரிய கிராம சேவகர் பிரிவில் உள்ள எக்ரிய, அலுத்வத்த மற்றும் பல்லேவெல கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் இதனை உறுதி செய்துள்ளது.

அகிரிய கிராமத்தில் கடந்த மாதம் 22 ஆம் திகதி நிலநடுக்கம் அதிகாலை 3.30 மணிக்கும், அதே நாளில் இரவு 9.55 மணிக்கும், 23 ஆம் திகதி காலை 10 மணிக்கும், 31 ஆம் திகதி அதிகாலை 2.59 மணிக்கும் ஏற்பட்டது.

31 ஆம் திகதி, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் புவி இயற்பியலாளர் மஹிந்த செனவிரத்ன உள்ளிட்ட குழு கிராமத்திற்குச் சென்று கிராமத்தில் உள்ள ஒரு வீட்டினுள் நில அதிர்வு அளவீட்டை நிறுவியது. அதை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது.

325 குடும்பங்களை சேர்ந்த 1200 பேர் அந்த கிராமத்தில் வசிக்கிறார்கள்.