ஒரு ஏக்கருக்கு மேல் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு துப்பாக்கி

நாடு முழுவதும் ஒரு ஏக்கருக்கு மேல் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்கப்பட்டது.

எனினும் அது திருத்தப்பட்டு 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போருக்கு மட்டுமே துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டது.

பாரம்பரியமாக விவசாயம் செய்வோர் ஒரு ஏக்கர் அல்லது அதற்கு கூடியதாகவே விவசாய நிலத்தை கொண்டுள்ளனர் என்பதால் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.