வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை காணவில்லை!

வவுனியாவில் 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடந்த 11 நாட்களாக காணவில்லை என அவரது மனைவி வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா – சி ஜீ ஆர் பூங்கா வீதியில் உள்ள 32 வயதான சௌந்தராஜா விஜயகுமார் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் கடந்த மாதம் 30 ஆம் திகதி பகல் 2.30 மணியளவில் தனது பழக் கடையலிருந்து வீடு திரும்புவதாக கூறி, அங்கிருந்து வெளியேறி சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கும் தொடர்பு கொண்டுகேட்டபோது அங்கும் அவர் இல்லாத காரணத்தினால் குடும்பத்தினர் வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெற்றால் தமக்கோ அல்லது வவுனியா காவல்துறையினருக்கோ தெரியப்படுத்துமாறு அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.