கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த பாடசாலை தமிழ் மாணவியின் சடலம்!

கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த பாடசாலை மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 16 வயதுடைய பாடசாலை மாணவியுனுடையதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பாடசாலை மாணவி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் வகுப்பு மாணவி என தெரியவந்துள்ளது.

இன்றைய தினம் காலை 6.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவி கொத்மலை நீர்த்தேகத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தில் இருந்து கீழே குதிப்பதனை பிரதேச மக்கள் அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக மாணவி இவ்வாறு நீரில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக மரண விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது