மீண்டும் தற்கொலைத் தாக்குதலா? கொச்சிக்கடை தேவாலயத்துக்கு மொட்டைக் கடிதம்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் போன்று இலங்கையில் மீண்டும் தாக்குதல் இடம்பெறலாம் என்கின்ற மொட்டைக் கடிதம் காரணமாக புலனாய்வுப் பிரிவினர் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த கடிதம் அண்மையில் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்குக் கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை, மத வழிப்பட்டுதலம் ஆகிய பகுதிகளுக்கு தாக்குதல் நடத்தப்படலாம் என்று குறித்த கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

இந்தக் கடித்ததை அடுத்து கடற்கரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொச்சிக்கடை தேவாலயத்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.