இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்னர் மகள்களுக்கு உணவு கொடுக்காமல் கொடுமை படுத்தி நிர்வாண நரபலி குடுத்த சைக்கோ பெற்றோர்!

இந்தியாவில் மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த பெற்றோர் சில புதிய தகவல்களை வழக்கறிஞரிடம் கூறியுள்ள நிலையில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த அதிர்ச்சி விடயங்கள் தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியை சேர்ந்த புருஷோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதி தங்களது மகள்களான அலெக்யா மற்றும் சாய் திவ்யா ஆகியோரை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட புருஷோத்தம் நாயுடு – பத்மஜா ஆகிய இருவரும் சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பிரபல வழக்கறிஞர் கிருஷ்ணமாச்சாரி தம்பதி சார்பில் வாதாடுகிறார்.

அவரின் உதவி வழக்கறிஞரான நக்கா ரஜினி என்ற பெண் சமீபத்தில் புருஷோத்தமை சந்தித்து பேசிய போது சில திடுக்கிடும் தகவல்களை அவர் கூறியுள்ளார்.

அதன்படி தம்பதியின் மூத்த மகள் அலெக்யா மந்திரவாதிகள் சிலர் மூலம் அமானுஷ்ய பயிற்சிகளை பெற்றிருக்கிறார்.

இதன் பின்னர் தனது குடும்பத்தாரிடம் வந்து பேசிய அலெக்யா, சாய் திவ்யா உடல்நலக்குறைவால் அவதிக்கப்படுகிறார்.

அவருடன் சேர்ந்து நாம் மூவரும் நரபலியால் உயிரை நீத்தால் மிகவும் தூய்மையான வடிவம் பெற்று மீண்டும் உயிர்த்தெழுவோம் என கூறியிருக்கிறார்.

இதற்கு நன்கு படித்த புருஷோத்தம் – பத்மஜா தம்பதியும் ஒப்பு கொண்டுள்ளனர்.

இதையடுத்து இரண்டு மகள்களையும் உட்கார வைத்து நிர்வாண பூஜைகள் செய்த பிறகு அவர்களை கொன்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் திடீரென தான் செய்வது தவறு என உணர்ந்த புருஷோத்தம் நண்பருக்கு போன் செய்திருக்கிறார்.

இதன்பின்னரே பொலிசார் மூலம் அவரும் அவர் மனைவியும் காப்பாற்றப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதனிடையில் உயிரிழந்த இரண்டு மகள்களின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து முதல் தடவையாக தெரியவந்துள்ளது.

அதன்படி இருவர் வயிற்றிலும் ஒரு பருக்கை உணவு கூட இல்லாமல் வயிறு காலியாக இருந்திருக்கிறது.

அதாவது நரபலி பூஜை செய்வதால் இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்னர் வரை இருவரும் எதுவுமே சாப்பிடாமல் இருந்துள்ளனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.