கொரோனா பாதித்தவரின் எச்சிலை பயன்படுத்தி முதலாளியை கொல்ல முயற்சித்த நபர்!

துருக்கியில் கொரோனா பாதித்தவரின் எச்சிலை பயன்படுத்தி முதலாளியை கொல்ல முயற்சி செய்த நபரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அதானா நகரில் கார்கள் விற்பனை மையத்தை இப்றாகிம் உன்வெர்தி என்பவர் நடத்தி வருகிறார்.

இவரிடம், ரமஜான் சிமென் உள்ளிட்டோர் கார் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வந்தனர். சிமென்னிடம் அதிக நம்பிக்கை வைத்திருந்த உவேர்டி, பணம் வைக்கும் அறையின் சாவியை அவரிடம் கொடுத்து வைத்திருந்தார்.

ஒருநாள் கார் விற்றதில் கிடைத்த பணம் குறித்து கேட்டபோது, அது தன்னிடம் பாதுகாப்பாக உள்ளதாக சிமென் தெரிவித்து இருந்தார்.

அதன் பின்னர் சிலநாட்கள் சிமென்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. மீண்டும், பணம் குறித்து அவனிடம் விசாரித்ததற்கு, தான் வாங்கிய லோனை கட்டுவதற்காக, ஆபிஸ் பணத்தில் இருந்து ரூ. 22 லட்சம் எடுத்துக்கொண்டதாக தெரிவித்திருந்தார். இதனால் கடும் கோபமடைந்த சிமென் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்தார்.

இதனையறிந்த சிமென், அவர் குடிக்கும் பானத்தில், கொரோனா தொற்று பாதித்தவரின் எச்சிலை கலந்து விட்டார். இந்த விசயம், உவேர்டிக்கு மற்றொரு ஊழியர் மூலம் தெரியவரவே, அவர் சுதாரித்துக்கொண்டு, அந்த பானத்தை தவிர்த்து விட்டார்.

இதனையடுத்து உடனடியாக உவேர்டி, போலீசில் சிமென் மீது புகார் அளித்துள்ளார். துருக்கி போலீசார், சிமென் மீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த முறை நீ தப்பிவிட்டாய்,இன்னொருமுறை நேரில் வந்து உன் தலையில் துப்பாக்கி வைத்து சுட்டுக் கொல்கிறேன் என உவேர்டிக்கு, சிமென் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.