இலங்கையில் தொழுநோயால் உயிரிழந்த குரங்கு!

தொழுநோயால் பாதிக்கப்பட்டு குரங்கொன்று உயிரிழந்துள்ளது. மொனராகலை மாவட்டம், சியம்பலாண்டுவ, ஆதிமலை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட விலங்கொன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது நிகழ்வாக இது குறிப்பிடப்படுகிறது.

ஆபத்தான நிலையில் வீழ்ந்து கிடந்த குரங்கை கிராமவாசிகள் மீட்டு, வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர். எனினும், 8ஆம் திகதி குரங்கு இறந்தது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டே குரங்கு இறந்ததாக மொனராகலை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரங்கின் உடல் பாகங்கள் கொழும்பு தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவுக்கு மேலதிக பரிசோதனைகளுக்கு அனுப்பப்படவுள்ளது.

இந்த பகுதியில் உள்ள ஏனைய பல குரங்குகளிற்கும் இந்த நோய் அறிகுறிகள் தென்படுவதாக குறிப்பிடப்படுகிறது.