நடிகை கீர்த்தி சுரேஷ் – அனிருத் காதல்?

நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் காதலித்து வருவதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். 2 தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.

இந்த நிலையில் கீர்த்தி சுரேசும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

3 மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய அனிருத்துக்கு கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடன் நெருக்கமாக இருக்கும் 2 புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

அந்த புகைப்படங்களை தற்போது வலைத்தளத்தில் வைரலாக்கி இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரப்பி வருகிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் பேசுகிறார்கள்.

ஆனால் இதனை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. இருவரும் நண்பர்கள்தான். காதல் இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தார்கள்.

ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியாவும், அனிருத்தும் ஏடாகூடமாக இருக்கும் புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.