குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்; தாரா லிங்கம் என உறுதி செய்த வரலாற்று ஆய்வாளர்

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் NKS.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் இன்று பதிவிட்டுள்ள அவர்,

“முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.