இந்தியாவில் “ராட்சசன்” பட பாணியில் பற்கள் உடைக்கப்பட்டு, சிறுமியின் சடலம் ஓன்று மீட்பு!

மேற்கு வங்கத்தில் எட்டு வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தாவில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 43 வயது நபர் கைதாகியதையடுத்து எஞ்சிய குற்றவாளி பிடிபட்டது எப்படி?

மேற்கு வங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவின் சோவபஜார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் 8 வயது சிறுமி அப்பகுதியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், அச்சிறுமி கடந்த
புதன்கிழமை அன்று ஜோராபகன் பகுதியில் உள்ள தனது மாமா வீட்டிற்கு அக்காவுடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் மாலை வரை விளையாடி கொண்டிருந்த சிறுமி 7.45 மணிக்கு காணாமல் போயுள்ளார். உடனே சிறுமியின் குடும்பம் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர் ஆனால் சிறுமி எங்கும் அகபடவில்லை. இதையடுத்து, அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில், போலீசாரும், துப்பறியும் குழுவும் சேர்ந்து சிறுமியை தேடு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியில் உள்ள பழைய கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொல்லப்பட்ட சிறுமியின் நிலையானது, ஆடைகள் கிழிந்த நிலையில், தொண்டை கத்தியால் கிழிக்கப்பட்டும், பற்கள் அடித்து நொறுக்கப்பட்டும் இருந்தது. எனவே சிறுமி கொல்லப்பட்டதற்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை முடுக்கினர்.

இந்நிலையில், சம்பவ நடந்த கட்டடத்தின் காவலாளியாக பணியாற்றி வரும் ராம்குமார் (43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் அவரும் பீகாரைச் சேர்ந்த ரன்வீர் தாந்தி என்பவரும் சேர்ந்து சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து பின்னர் கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், சிறுமியின் பற்கள், சம்பவ இடத்தில் கிடந்த கத்தி ஆகியவற்றை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பினர்.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், மேற்கண்ட ஆய்வு அறிக்கைகள் வந்தவுடன் கூடுதல் தகவல்களை தெரிவிப்போம் என்று கொல்கத்தா காவல் துறையினர் கூறுகின்றனர்.