உலக முடிவில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

மடூல்சீமை – பிடமாருவையில் அமைந்துள்ள சிறிய உலக முடிவை பார்வையிட சென்று காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி இவர் உள்ளிட்ட 12 பேர் சிறிய உலக முடிவை பார்வையிட சென்றிருந்த போது அங்கு காணப்பட்ட அதிக பனிமூட்டம் காரணமாக பள்ளத்தில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.

பின்னர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அவரின் சடலம் இரண்டு நாட்களுக்கு பின்னர் இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் 34 வயதுடைய களுத்துறை மக்கொன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.