கொழும்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (07) மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 214 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (07) நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 878 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 70,235 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவர்களில், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 214 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 208 பேரும், பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த 181 பேரும், காலி மாவட்டத்தை சேர்ந்த 50 பேரும், குருணாகலை மாவட்டத்தை சேர்ந்த 40 பேரும் மற்றும் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த 47 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 740 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 64,141 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 5,729 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் உயிரிழந்ததை அடுத்து வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக உயர்வடைந்துள்ளது.