கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகரின் நிலைமை கவலைக்கிடம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் W.J.M லொக்குபண்டாரவின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இன்று தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளாஇ முன்னாள் சபாநாயகர் சிகிச்சை பெரும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே தற்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.