4 வயதுடைய குழந்தையொன்று கருங்கல் ஒன்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு!

பண்டாரவெல- ஹல்தும்முல்லை – ஹரங்கஹவ பிரதேசத்தில் 4 வயதுடைய குழந்தையொன்று கருங்கல் ஒன்றுல் சிக்கி சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளது.

இன்று மதியம் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ள நிலையில், வெலிமடை உடபேருவ பிரதேசத்தை சேர்ந்த குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தாய், தந்தையுடன் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குழந்தை தந்தையுடன் கருங்கல் ஒன்றில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது அங்கு குரங்கொன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, கல்லில் இருந்து அவர்கள் பாய்ந்துள்ள நிலையில் குறித்த கருங்கல் கவிழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.