கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாலபே நெவில் பெர்னாண்டோ காலமானார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாலபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் நிறுவுனர் வைத்தியர் நெவில் பெர்ணாண்டோ சற்று முன்னர் உயிரிழந்தார்.

கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.