கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3231 பேர் பாதிப்பு; 142பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 3,231பேர் பாதிக்கப்பட்டதுடன் 142பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக ஏழு இலட்சத்து 89ஆயிரத்து 651பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20ஆயிரத்து 355பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் , 48ஆயிரத்து 221பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 760பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் , ஏழு இலட்சத்து 21ஆயிரத்து 075பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.