கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனையில் 150 சிறுவர்களுக்கு கொரோனா!

கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனையில் 150 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறுவர்களை வைத்தியசாலைகளில் வைத்திருந்த 100 பெற்றோருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு குழந்தைகள் உயிரிழப்பே வைத்தியசாலைகளில் சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.