கொட்டும் மழையிலும் பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் லட்சம் தமிழர்களை நெகிழவைத்த மதகுருமார்கள்!

தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் அத்துமீறிய பௌத்தமயமாக்கல் போன்ற இன்னபிற அரசின் அடாவடித்தனங்களை முன்னிறுத்தி இன்றைய தினம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் எனும் மாபெரும் நடைபவனிப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா சாணக்கியன் ஆகியோருடன் பல்வேறு மதத்தலைவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இன்றைய முதலாம் நாள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அதுமட்டுமன்றி முஸ்லிம் மக்களில் சிலரும் இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆதரவுக் கரங்களை நீட்டியிருந்தனர்.

இதேவேளை கொட்டும் மழையின் மத்தியில் ஆரம்பமானபோதும் மத குருமார்கள் மழையையும் பொருட்படுத்தாது இந்த போராட்டத்தில் கலந்துகொண்டமை அனைவரையும் நெகிழவைத்துள்ளது.