யாழ்.சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயிலா ? உண்மை என்ன ?

யாழ்.சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்திருப்பது உண்மை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி பாரதிதாஸன் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தலமையில் நடைபெற்று வருகிறது.

இதன்போது சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும்போதே பொறுப்பதாகாரி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்படி சுன்னாகம் பகுதியில் 12 கிணறுகளில் தனியாரின் நிதி பங்களிப்புடன் ஆய்வு செய்த நிலையில் 6 கிணறுகளில் கழிவு ஒயில் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியிருக்கின்றார்.

மேலும் அந்த நீரை பருகலாமா? இல்லையா? என்பதை குறித்து தாம் இப்போது கூற முடியாதெனவும் அதனை கூற மேலும் ஆய்வுகள் தேவை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.