மகளை நிர்வாணமாக நரபலி கொடுத்து மகளின் நாக்கை சாப்பிட்டாரா தாய் பத்மஜா?

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் சொந்த மகள்களை பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவத்தில், பூசாரி அளித்த வாக்குமூலம் பகீர் கிளப்பியுள்ளது.

ஆந்திரா மாநிலம் மதனபள்ளி பகுதியை சேர்ந்த புருசோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதி, தங்களின் இரு மகள்களான அலெக்கியா மற்றும் சாய் திவ்யா ஆகிய இருவரையும் நிர்வாணமாக நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அதிக கல்வி அறிவு கொண்ட தம்பதி தங்களது பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்துள்ளது, உளவியல் பிரச்சனை காரணமாகவே என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

தங்கள் பிள்ளைகளை மறுபடியும் மீட்டெடுக்கும் முயற்சிக்கு பொலிசார் தடையாக இருந்தனர் என்றே பத்மஜா கூறி வருகிறார்.

மட்டுமின்றி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த முயன்றபோது, கொரோனா என்பதே இல்லை என்றும், அது சிவனின் தலைமுடியில் இருந்து வெளியான ஒருவகை எச்சரிக்கை எனவும், தாமே அந்த சிவன் எனவும் கூறியுள்ளார்.

விசாரணையின் போது, புருஷோத்தம் நாயுடு தனது மகள் அலெக்கியா அர்ஜுனனின் வடிவம் என்றும், அவரது வார்த்தைகளை தாம் நம்புவதாகவும் கூறினார்.

இந்த நிலையில், புருஷோத்தம் நாயுடு வீட்டில் பூஜைகள் செய்த பூசாரி சுப்பா ராமையாவை பொலிசார் விசாரித்துள்ளனர்.

ஜனவரி 23 ஆம் திகதி புருஷோத்தம் நாயுடு வீட்டிற்குச் சென்றபோது அவர்கள் உளவியல் ரீதியாக நலமாகவே இருந்ததாக ராமையா தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமையா அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது, புருஷோத்தம் நாயுடு தனது மகளின் அறையில் இருந்துள்ளார், அவர்கள் சிறிது நேரம் வரை அறையைத் திறக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டுமின்றி, அவர்கள் கதவின் தாழ்ப்பாளைத் திறக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது எனக் கூறும் சுப்பா ராமையா, அந்த அறையில் அவர்களை வேறு மனநிலையில் கண்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பூஜையை மேற்கொண்ட ராமையா, அலெக்யாவை பால் குடிக்கச் செய்தார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தாயத்துக்கள் மற்றும் ருத்ராக்ஷைக் கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் ராமையா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொலை செய்வதற்கு முன்பு அலெக்கியாவின் நாக்கை பத்மாஜா சாப்பிட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பில், உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய சாத்தியமான அனைத்து கோணங்களிலும் பொலிசார் விசாரித்து வருவதாக தகவல் தெரிய வந்துள்ளது.