கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய் ஒன்று உலகை அச்சுறுத்தும் என தனக்கு முன்னரே தெரியுமாம் – பரபரப்பை ஏற்படுத்திய இலங்கை ஜோதிடர்

கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய் ஒன்று உலகை அச்சுறுத்தும் என தனக்கு முன்னரே தெரியும் என இலங்கையின் பிரபல ஜோதிடர் சந்திரசிரி பண்டார தெரிவித்துள்ளார்.

மக்கள் அச்சமடைவார்கள் என்பதனாலேயே தான் வெளியே கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நானும், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்கவும் 2019ஆம் ஆண்டு கலந்துரையாடல் மேற்கொண்டோம்.

அதற்கமைய 2019ஆம் செப்டெம்பர் மாதம் அளவில் எனக்கு தோன்றியது. எனினும் இவ்வளவு தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான திறன் கொண்ட உலக நாடுகளுக்கு இது சாத்தியமா என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது.

எனினும் நான் தீவிரமாக ஆராய்ந்த போது இரண்டு வருடங்களுக்கு மேல் கையை கட்டிக்கொண்டு, வாயை மூடிக்கொண்டு வாழ நேரிடும் என எனக்கு சோதிடத்தில் காட்டியது.

எனக்கு ஒரு பயம் ஆரம்பம் முதல் இருந்தமையினால் இதனை உலகிற்கு கூறவில்லை. இதனை எஸ்.பீ.திஸாநாயக்கவும் பெரிதாக நம்பவில்லை.

தற்போது அவரும் தனிமைப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.