இதுவரையில் 95 ஆயிரம் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டது

இலங்கையில் இன்று (01) நாடு பூராகவும் 36 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார ஊழியர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா ( Oxford Astra – Zeneca) தடுப்பூசி போடப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றைய தினம் 36,396 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 95,550 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.