கங்கையில் நீராட சென்ற மாணவி ஒருவர் பலி!

பலாங்கொடை, கல்தொட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் ஒரு மாணவி நிரீல் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை, தென்ன பிரதேசத்தை சேர்ந்த நிரோஷிகா குமாரி என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்தொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் குறித்த மாணவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மாணவி ஒருவர் அதனை கைப்பேசியில் காணொளி பதிவு செய்துள்ளார்.