மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி சிறுமிக்கு 61 வயது முதியவர் செய்த கொடூரம்!

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 61 வயது முதியவருக்கு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 61 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு க.புதுப்பட்டியைச் சேர்ந்த 61 வயதான மனோகரன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அத்தோடு இது தொடர்பான வழக்கில் தீர்ப்புக்கூறிய நீதிபதி, முதியவருக்கு 10 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.