பேசமுடியாமலிருந்த பிரபல சிங்கள பாடகரை பாட வைத்தாராம் கிறிஸ்தவ போதகர் – இலங்கையில் சம்பவம்

பிரபல சிங்கள பாடகர் விக்டர் ரத்னாயக்க தொடர்புபட்ட காணொலியொன்று வெளியாகி பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. முதுமை காரணமாக பேச முடியாத நிலைமைக்கு சென்ற ரத்னாயக்கவிற்கு கிறிஸ்தவ போதகர் ஒருபர் ஜெபம் மூலம் மீளவும் குரல் வளத்தை திரும்ப செய்ததாக அதில் காண்பிக்கப்படுகிறது.

இதையடுத்து, தீவிர பௌத்த ஊடகங்கள் அவரை கரித்து கொட்டிக் கொண்டிருக்கின்றன.

மொரட்டுவ பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஜெப குழுவொன்றின் மையத்தில் அந்த வீடியோ பதிவானது.

தனது குரல் வளத்தை இழந்து பேச முடியாத நிலையில் விக்ரர் ரத்னாயக்க இருந்ததாக கூறப்பட்டு அவர் அங்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது தொண்டையை பிடித்து, “ஏய்.. கெட்ட பிசாசே உன்னை விரட்டுகிறேன“ என போதகர் ஒருவர் கூச்சலிட்டு, ஜெபம் செய்த பின்னர், ரத்னாயக்கவின் குரல் வளம் திரும்புவதை போலவும், அதன் பின்னர் அவர் சில வார்த்தைகள் பேசுவதை போலவும் வீடியோவில் காண்பிக்கப்படுகிறது.

விக்ரர் ரத்னாயக்க ஏற்கனவே சில காலத்தின் முன் சர்ச்சைக்குள்ளானவர். அவரது மகளை விட வயதில் இளைய பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார். அப்போது சர்ச்சையானதில், அவரது பிள்ளைகளும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

அவரது மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணித்த போது, இறுதிச்சடங்கிலும் விக்ரர் ரத்னாயக்க கலந்து கொள்ளவில்லை.

அவரது இளம் மனைவியின் மதத்தின் ஜெப நிகழ்விலேயே அவர் கலந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com