மட்டக்களப்பு வாவியில் மிதந்த சடலம்!

மட்டக்களப்பு- கண்ணகி அம்மன் ஆலய வீதியிலுள்ள வாவியில், ஆணொருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 60 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, மட்டு.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பாக எந்தவிபரமும் அறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com