யாழில் குடும்ப தகராறினால் கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை!

யாழில் குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம்- நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான நீ.நிரோஜினி (வயது 30) என்பவரே இவ்வாறு உரிழந்துள்ளார்.

கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து கணவன் கண் முன்னே தனக்கு தானே தீ மூட்டியுள்ளார்.

இதனையடுத்து பதறிய கணவன் தீயை அணைத்து மனைவியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

எனினும் குறித்த பெண் , சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com