
நாட்டில் மேலும் 351 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் ஹட்டன் – ஸ்ரீபாத ஆரம்ப பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து அவருடன் தொடர்பை பேணிய 12 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
