வீதி விபத்துக்களில் ஆறு நாட்களில் 30 பேர் பலி

ஜனவரி 17 – 22 வரையான ஆறு நாட்களில் நாடு முழுவதும் பதிவான 427 வீதி விபத்துக்களில் மொத்தமாக 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன்போது 189 பேர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்  அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இந்த 427 வீதி விபத்துக்களின் போது 119 வாகனங்கள் சேதங்களுக்குள்ளாகியும் உள்ளன.

இதேவ‍ேளை கடந்த 24 மணிநேரத்தில் பதிவான வீதி விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களிலேயே சிக்குண்டவர்கள் ஆவர் என்றும் அவர் மேலும் கூறினார்.