மஹிந்த உடல்நிலை சரியில்லையென வதந்தியை கிளப்பிய ஊடகங்கள்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் வதந்தி, அவர் பாதுகாப்பாக இருக்கிறார் மற்றும் அவரது வழக்கமான வேலைகளில் கலந்துகொள்கிறார் என்று பிரதமர் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பரவிய தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டது.

பிரதமர் தனது அன்றாட வேலைகளில் கலந்துகொள்கிறார், திங்களன்று திட்டமிடப்பட்ட பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.