மட்டக்களப்பு பிரதான வீதியில் நேருக்குநேர் மோதிக்கொண்ட பேருந்துகள்!

மட்டு – கல்முனை பிரதான வீதியில் இரு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் அரச கட்டிடத்திறகு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மே்ம தெரியவருகையில்,

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதியில் இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு பேருந்துகளுக்கும், பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அரசாங்க கட்டிடமொன்றிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுளளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 7 மணியளவில் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, ஆரையம்பதி கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு தனியார் பேருந்து மீது பின் பக்கமாக மோதியதில் இரு பேருந்துகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் கமநல சேவைகள் திணைக்கள அலுவலத்தின் மதில்மற்றும் பிரதான கதவுகள் உடைந்து நொருங்கி சேதமடைந்துள்ளன.

பின்னால் வேகமாக வந்த பேருந்து வேறொரு வானை முந்திச் செல் முற்பட்டபோதே நிறுத்தியிருந்த பேருந்து மீது மோதியதால் அந்த பேருந்து அலுவலக கட்டிட மதிலில் மோதியுள்ளது. அதன்போதே அக்கட்டிடத்திற்கு சேதமேற்பட்டுள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.