ரஷ்யாவில் மகனை திருமணம் செய்துக் கொண்ட தாய்!

ரஷ்யா நாட்டை சேர்ந்த மரினா (35) என்பவர், உடல் எடை குறைப்பது தொடர்பாக டிப்ஸ் வழங்கும் பணியை இணையத்தில் செய்து வருகிறார்.

இவர், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, அலெக்ஸ் (45) என்ற நபரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவரது 5 குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில், அலெக்ஸை விவாகரத்து செய்த மரினா, அந்த குழந்தைகளில் ஒருவரான விளாடிமிர் (21) என்ற அவரது தத்துப்பிள்ளையை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

மேலும், அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் தற்போது பிறந்துள்ளது. இதுதொடர்பான தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட மரினா, அலெக்ஸ் உடன் தான் நிம்மதியாக வாழவில்லை. நடிக்க மட்டுமே செய்தேன். விளாடிமிர் சிறந்த மனிதராகவும், சிறப்பான தந்தையாகவும் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

மரினாவின் இந்த முடிவிற்கு ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்து வந்தாலும், இதுதொடர்பான பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.