நண்பர்களின் வீட்டில் விருந்திற்கு சென்றவர் உறக்க நிலையிலே சடலமாக மீட்பு!

நண்பர்களின் வீட்டில் இடம்பெற்ற விருந்திற்கு சென்ற நபர் அன்றைய தினம் இரவு உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார் என மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்மல்வல கென்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த சீ.சஞ்ஜீவ லக்ஷான் (39 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். அவர் கடந்த 10ஆம் திகதி ரத்மல்வல பிரதேசத்தில் உள்ள நண்பரின் அழைப்பின் பேரில் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.