
லண்டனில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கையும் பொருளாதார தாக்கத்தாலும் குடும்பத்தில் ஏற்ப்பட்ட சண்டையால் இரண்டு குஞ்சுகள் பலியானது.
நித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்.
லண்டன் இல்பேட்டில்(Ilford) உள்ள விநாயகம் ஸ்ட்டோர் கடைக்கு மேல் வசித்துவந்த தம்பதிகளுக்கு இடையே நேற்று நடந்த வாக்கு வாதத்தில் இரண்டு தமிழ் குழந்தைகள் குத்திக்கொலை: 40 வயது நபர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. நேற்று மாலை 5.30 மணியளவில் கிழக்கு லண்டனின் இல்பேட்டில்(Ilford) இலுள்ள ஒரு வீட்டுக்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.
அங்கு சென்ற பொலிசார் ஒரு வயது பெண் குழந்தை ஒன்றும், மூன்று வயது ஆண் குழந்தை ஒன்றும் கத்திக்குத்துக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளனர். மருத்துவ உதவிக்குழுவினர் சோதித்ததில், அந்த பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. அந்த மூன்று வயது ஆண் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
மேலும் அங்கிருந்த 40 வயது நபர் ஒருவரும் கத்திக்குத்துக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அவரது தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.மேற்கொண்டு விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




நித்தின் குமார் வேலை செய்யும் இடம்

