பிரித்தானியாவில் வாடகை கட்ட முடியாத வியாபார நிறுவனங்களை பாதுகாக்க புதிய சட்டம்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பிரதான வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் வாடகை வசூல் இருந்து பாதுகாக்கப்படும்

பாதிக்கப்பட்ட வியாபார நிறுவனங்களை பாதிக்கும் வகையில் வாடகை பெற முயற்சி செய்யும் கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து பாதுகாக்கும் முகமாக இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

பெரும் பாலான கட்டிட உரிமையாளர்கள் இந்த அசாதாரண நிலைமைகளை புரிந்து கொண்டு நடந்தாலும் சிலர் வாடகையை அறவிட மிகவும் மோசன வழிகளை வாடகை சேகரிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.

இதை நிறுத்துவதற்காக அரசாங்கம் தற்காலிகமாக பேங்க்ருப்சி (bankruptcy) போன்ற சட்ட ரீதியாக எடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க சட்டம் இயற்றப்படும் என்று பிரித்தானிய அரசின் தொழில்துறை அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்தார். அதே வேளையில் வியாபார கட்டிடங்களுக்கான வாடகையை முறையாக அறவிடும் (Commercial Rent Arrears Recovery) வழியில் கட்டிட உரிமையாளர் வாடகை 90 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த தற்காலிக தடை 30 ஜூன் 2020 வரை இருக்கும், தேவைப்பட்டால் இது மேலும் நீடிக்கப்படலாம்.

https://www.gov.uk/government/news/new-measures-to-protect-uk-high-street-from-aggressive-rent-collection-and-closure

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com