பிரித்தானியாவில் பிறந்த குழந்தையை கூட ஒரு முறை கூட பார்க்காமல் இறந்த இளம் தாயார்

பிரித்தானியாவில் 29 வயதான இளம் தாயார் ஒருவர் தமது முதல் குழந்தை பிறந்த அடுத்த நாளே, கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

பர்மிங்காம் ஹார்ட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஃபோசியா ஹனிஃப் என்பவரே தமது குழந்தையை கூட ஒருமுறை பார்க்காமல் மரணமடைந்தவர்.

கடந்த ஆண்டு தமது முதல் குழந்தையை கருவிலேயே இழந்த நிலையில், தற்போது தமது இரண்டாவது குழந்தைக்காக அவர் மிகுந்த கவனத்துடன் மருத்துவ சோதனைகளை நிறைவேற்றி வந்துள்ளார்.

அவ்வாறாக ஒருமுறை மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டது.பெரிய பாதிப்பு இல்லை என்றும், வீட்டுக்கு திரும்பலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வீட்டுக்கு திரும்பிய நான்காவது நாள், நிறைமாத கர்ப்பிணியான ஃபோசியாவின் நிலை மோசமடைந்ததுடன் அவர் மூச்சுவிடவும் சிரமப்பட்டுள்ளார்.

அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு என அனைத்தும் சாதாரணமாக இருந்துள்ளது, இருப்பினும் ஃபோசியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனிடையே, அவரது நிலை மிகவும் மோசமடையவும், ஒருகட்டத்தில் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இன்னும் பிழைப்பது கடினம் என உறுதி செய்த மருத்துவர்கள், ஃபோசியாவின் செயற்கை சுவாசத்தை அப்புறப்படுத்த அனுமதி கோரியுள்ளனர்.

ஃபோசியாவின் 29-வது பிறந்தநாளன்று ஏப்ரல் 8 ஆம் திகதி அவரது செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு அவர் இறந்ததாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே ஃபோசியாவின் குழந்தைக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

ஃபோசியா
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com