
எதிர்வரும் செப்டம்பருக்குள் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் இலக்கில் இன்று (23) அதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் பிரித்தானியாவில் ஆரம்பமாகியுள்ளது.
தடுப்பூசி பரிசோதனைக்காக (vaccine trial) இரண்டு தன்னார்வலர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளது.
800 இற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டு ஆய்வுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிபுணர்கள் குழுவால் 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட்டது