
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வெலிசறை கடற்படை முகாம் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜா-எல, சுதுவெல்ல பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கடற்படை சிப்பாய்கள் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இன்று மட்டும் 10 மணி வரை கடற்படை வீரர்கள் 30 பேர் உட்பட 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.