
வவுனியாவில் கோடீஸ்வரராக இருந்தவர் இன்று மீன் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
2005-ம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியாவில் பேருந்துகள், கடைகளென வியாபாரத்தில் கொடிகட்டிப்பறந்துக்கொண்டிருந்த நபரொருவர், ஒட்டுக்குழுக்கள் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்ததால் குடும்பத்துடன் கனடா சென்றார்.
இதனால் தனது சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு, இருந்த பணத்தினை கொண்டு ரகசியமாக சென்றார். அவர் சென்றதுடன் அவரின் சொத்துக்களும் மெல்ல மெல்ல உறவுகளால் சீரழிக்கப்பட்டு விட்டன.
தற்போது மனைவி, பிள்ளைகளுடன் வயது முதிர்ந்த நிலையில் கனடாவில் மீன் கடையொன்றில் வேலை செய்து வருவதாகவும், நான் சொந்த ஊரில் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பேன் எனவும் தனது முகநூலில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
