
4000 படுக்கைகளை கொண்டு அமைக்கப்பட்ட வைத்தியசாலையில் 30 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது காரணம் தாதிமார் பற்றாக்குறை ஏற்பட்டதால்.
பிரித்தானியாவின் மிகப் பெரும் கண்காட்சி மண்டபமாகிய இலண்டன் எக்செல் மண்டபத்தை பிரித்தானிய இராணுவம் கொரோனாவுக்கெதிரான மருத்துவமனையாக மாற்றியுள்ளனர். Nightingale மருத்துவமனை என்னும் பெயரில் 4,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றை அமைத்துள்ள இராணுவம், கொரோனாவுக்கெதிரான இந்த போராட்டத்தை யுத்தத்துடன் ஒப்பிட்டுள்ளது.