கனடாவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா தொற்றாளர்கள் !

உலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 593 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 144 பேர் மரணித்துள்ளனர்.

கனடாவில் 40 ஆயிரத்தை நெருங்கியுள்ள கொரோனா தொற்றாளர்கள்!

கனடா மாநிங்களில் கியூபெக் மாநிலமே அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அங்கு பாதிக்கப்பட்டோர் 20 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் இதுவரை 20 ஆயிரத்து 126 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஒன்ராறியோ மாநிலம் பாதிப்பில் அடுத்த இடத்தில் உள்ளதுடன் அங்கு இதுவரை 11 ஆயிரத்து 735 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.