
மஸ்கெலிய புரோன்ஸ்விக் பிரிவுக்கு உட்பட்ட 10 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் 5 ஆயிரம் ரூபா கெடுப்பனவிற்காக வீதி ஓரங்களில் தவமிருப்பதாக தெரியவருகிறது
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று 21 ஆம் திகதி முதல் சமூர்த்தி அலுவலகத்திற்கு வருமாறு மக்களுக்க அழைப்பு விடுத்த போதும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
சமூர்த்தி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது அதற்கான சரியான தெளிவூட்டல் கிடைக்கப்பெறவில்லை. இதன்காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீதியோரங்களில் கொரோனா அச்சத்தின் மத்தியில் 5 ஆயிரம் ரூாவிற்காக வீதியோரங்களில் நிற்கின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்து மூன்று நாட்களாக இந்த சமூர்த்தி அலுவலகத்திற்கு வந்து செல்கின்றேன். இது வரை எந்த கொடுப்பனவுகளும் கிடைக்கப்பெறவில்லை.
எனது குடும்பத்தில் நான் மட்டுட் கொழும்பில் வேலை வெய்தேன். ஆனால் தற்போது எனது குடும்பத்தாருக்கு எந்த ஒரு வருமானமும் இன்றி இருக்கிறேன் என்றார்.
இதுபோன்று பலர் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், சிறு தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்கள், தனியார் பேருந்து ஓட்டுனர்கள், வாகன சாரதிகள், சிறு வியாபரிகள், கட்டட தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், தச்சர்கள், நாட்கூலியாக வேலைசெய்யும் நபர்கள், தொழிற்சாலைகளில் வேலைசெய்பவர்கள், நாடக நிறுவனங்கள், நிகழ்வுகளுக்கு பொருட்களை வழங்குபவர்கள், சிகை அலங்கார தொழிலில் ஈடுபடுபவர்கள், பிராந்திய செய்தியாளர்கள் உள்ளிட்டோருக்கு இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நிதித்தொகை அவர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக அடையாளம் காணப்பட்டு, காத்திருப்பு பட்டியலிலும் உள்ளடக்கப்படாதவர்கள் இருப்பினும் கிராம குழுவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்காக இந்த 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இதுவரை எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லையென தெரிவிக்கும் இம் மக்களுக்கு உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
