சிறிலங்கா எல்ல பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

எல்ல பகுதியைச் சேர்ந்த கினலன் பெருந்தோட்டத்தில் இன்று காலை (22-04-2020) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோத கசிப்பு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் இடத்தை ,எல்ல பொலிசார் முற்றுகையிட்டனர்.

சட்டவிரோத கசிப்பு தயாரிப்பு மற்றும் விற்பனை விடயமாக மூன்று இளைஞர்களை பொலிசார் கைதுசெய்த போதிலும், அவர்களில் ஒரு இளைஞர் பொலிசார் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அத்துடன் கசிப்பு தயாரிப்பு செய்யும் இடத்திலிருந்து 22,500 மில்லி லீற்றர் கொண்ட கசிப்பு தயாரிக்கும் கோடா மற்றும் பெருமளவிலான உபகரணங்கள், விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 30 போத்தல் கசிப்பு ஆகியன பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், பொலிசாரின் பிடியிலிருந்து தப்பியோடிய இளைஞனை பொலிசார் தேடி வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், விசாரணையின் பின்னர், பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று,பொலிசார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாகவிருந்தே, மேற்படி கசிப்பு தயாரிப்பும், விற்பனையும் இடம்பெற்று வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இது குறித்து பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, எல்லபொலிசார் மேற்படி சுற்றிவளைப்பில், இன்று ஈடுபட்டிருந்தனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com