42 வயது கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த 29 வயது மனைவி!

தமிழகத்தில் கணவன் உயிரிழந்த சம்பவத்தில், மனைவியே காதலனுடன் சேர்ந்து கொலை செய்திருக்கும் சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்காளை(42). இவருக்கு கலையரசி(29) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

முத்துக்காளை கேரளாவில் சமையல் வேலை பார்த்து வருவதால், அடிக்கடி கேரளா சென்று திரும்பியுள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் கலையரசிக்கு, அதே கிராமத்தை சேர்ந்த சேதுபதி என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டது. இது குறித்த தகவல் முத்துக்காளைக்கு தெரியவர, அந்த கிராமத்தை விட்டு குடும்பத்துடன் வெளியேறி, தேனி அருகே இருக்கும்,

தர்மபுரி என்ற கிராமத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த 3-ஆம் திகதி முதல் முத்துக்காளையை காணவில்லை. தன்னை பார்க்க வருவதாக

முத்துக்காளை சொல்லியிருந்த நிலையில், அவர் வராததால், அண்ணன் ஈஸ்வரன் சந்தேகமடைந்துள்ளார்.

இதனால் கலையரசியிடம் சென்று என்னுடைய தம்பி எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு கலையரசி என்னிடம் சண்டை போட்டுவிட்டு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இருப்பினும், சந்தேகமடைந்த ஈஸ்வர, இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தர்மபுரி – காமாட்சிபுரம் சாலையில் ஓடைப்பட்டி அருகே, ஒரு கிணற்றில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து விரைந்து சென்ற பொலிசார், அது யார் என்று பார்த்த போது, அது காணமல் போன முத்துக்காளையின் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிசார் உடனடியாக இது குறித்து கலையரசியிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் அளித்த வாக்குமூலம் பொலிசாரை அதிர வைத்துள்ளது.

அதில், என்னை சந்தோஷமாகவே வாழ விடவில்லை, காதலனுடன் சேரக்கூடாது என்று தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.

இதன் காரணமாக அவரை நைசாக பேசி ஏமாற்றி சின்னமனூருக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றேன்.

இரவு நேரத்தில் அங்கே போய் சேர்ந்ததும், கழிவறைக்கு செல்வதாக சொல்விட்டு தலைமறைவாக நின்று கொண்ட்ரேன்.

அப்போது என் கணவர் இருந்த இடத்திற்கு காதலன் சேதுபதி மற்றும் அவரது நண்பர் அங்கு வந்து முத்துக்காளையை தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, சடலத்தையும் கிணற்றில் வீசிவிட்டு வந்துவிட்டோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com