
பொதுத்தேர்தலை நடாத்துவதை அரசாங்கம் மீள் பரீசிலனை செய்ய வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்தல் தொடர்பில் தனது கட்சி ஆதரவாளர்களுடன் சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள இன்று (22) ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.