மின்னல் தாக்கி ஒருவர் பலி

தும்மலசூரிய பிரதேசத்தில் மூன்று பேருக்கு மின்னல் தாக்கியதில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 69 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் சாரதியாக பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீட்டில் மின் கம்பி ஒன்றை அகற்றி கொண்டிருந்த போது குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இவரின் மனைவி மற்றும் மகளுக்கு மின்சாரம் தாக்கி உள்ள நிலையில் பின்னர் குறித்த மகள் மின்சார இணைப்பை துண்டித்ததன் பின்னர் தாய் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ச‌ம்பவ‌ம் தொடர்பில் தும்மலசூரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com