கொழும்பில் இருந்து யாழுக்கு தப்பி வந்த நபர்; தனிமைப்படுத்தல்

கொழும்பு – டாம் வீதியில் இருந்து லொறி ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்த சுழிபுரத்தை சேர்ந்த ஒருவர் வலி மேற்கு சுகாதார பரிசோதகர்களினால் கண்டு அறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் கொழும்பு – டாம் வீதியில் தங்கியிருந்த சுழிபுரம், தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்தவரே சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு பொருட்களை ஏற்றி வந்த லொறியிலேயே அவர் தப்பி வந்துள்ளார்.

தகவலறிந்த வலி மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள், அவரைத் தேடிக் கண்டறிந்து வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

லொறியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com